×

கடையம் அருகே இலவச கண் மருத்துவ முகாம்

கடையம்,நவ.16: கடையம் அருகே அழகப்பபுரத்தில் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன் தர்மபுரம் மடம் ஊராட்சி மன்றம் மற்றும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் தொடங்கி வைத்தார். டாக்டர் பழனிக்குமார் தலைமையில் மற்றும் கண் பரிசோதனையாளர் மகேஷ் கண் பரிசோதனை மேற்கொண்டனர்.இதில் கிராம சுகாதார செவிலியர் முத்துலட்சுமி, இடைநிலை சுகாதார பணியாளர் சுலோச்சனா, பெண் தன்னார்வ ஊழியர் பாக்கியலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் வேலுமயில், பாத்துமாள் பீவி, சாந்தா முகம்மது மைதீன் மற்றும் தர்மபுரம் மடம், அழகப்பபுரம் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கடையம் அருகே இலவச கண் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Ophthalmology Camp ,Kadayam ,Dharmapuram Math Panchayat Council ,Kadayam Government Primary Health Center ,Alagappapuram ,Tenkasi District Vision Loss Prevention Society ,Panchayat Council ,
× RELATED கடையம் அருகே சுடுகாட்டுக்கு பாலம்...