×

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மீண்டும் தலைதூக்கிய ஆட்டோ ரேஸ்

பூந்தமல்லி, நவ. 16: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலைகளில் பைக் மற்றும் ஆட்டோ பந்தயம், சாகசங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் ஆட்டோ ரேஸ் நடத்துவது கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே நடந்த ஆட்டோ ரேஸில் ஆட்டோக்கள் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலைகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து ஆட்டோ ரேஸ் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில் நீண்ட நாட்களாக காத்திருந்த ஆட்டோ ரேஸில் ஈடுபட்டவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் ஆட்டோ ரேஸ் நடத்தியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் அதிகாலையில் வேகமாக வரிசைகட்டி சென்ற ஆட்டோக்கள் நெடுஞ்சாலையின் மீது சென்றதும் மின்னல் வேகத்தில் செல்ல ஆரம்பித்தன. அதனை பைக்கில் சென்றவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். தற்போது மீண்டும் ஆட்டோ ரேஸ் தலை தூக்க தொடங்கியுள்ளது வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளத்தில் வைரலான நிலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட நபர்கள் யார், எந்த பகுதியில் இந்த ரேஸ் நடைபெற்றது என்பது குறித்து வீடியோக்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மீண்டும் தலைதூக்கிய ஆட்டோ ரேஸ் appeared first on Dinakaran.

Tags : Vandalur Meenjoor Outer Ring Road ,Poontamalli ,Vandalur – ,Meenjoor ring road ,Tambaram ,Maduravayal ,Dinakaran ,
× RELATED சிறை கைதிகளிடம் செல்போன், கஞ்சா...