×
Saravana Stores

2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.16: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் முரளி(28), கட்டிட தொழிலாளி. இவர் பாண்டிச்சேரியில் தங்கி சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிளி(24). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 15ம்தேதி, ஷர்மிளி பாண்டிச்சேரியில் இருந்த முரளிக்கு போன் செய்து, நடூரில் உள்ள பாட்டி முருகாயி வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். பிறகு முரளி போன் செய்த போது, பாட்டி வீட்டில் குழந்தைகளுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், முரளி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, பாட்டி வீட்டில் ஷர்மிளி மற்றும் இரு குழந்தைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து நேற்று பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,Murali ,Venkatasamutra ,Pondicherry ,Sharmili ,Pondicherry… ,Mayam ,
× RELATED கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்