×
Saravana Stores

கடன் தொல்லையால் டெய்லர் மாயம்

கிருஷ்ணகிரி, நவ.16: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ஆருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(29). டெய்லர் கடை வைத்துள்ள இவர், தனக்கு தெரிந்தவர்களிடம் அதிகளவில் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை அவரால் சரியான நேரத்தில் திருப்பி தரமுடியவில்லை. இதனால், பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு வந்தனர். இதனால் விஜயகுமார் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஜயகுமார், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை நாராயணப்பா அளித்த புகாரின் பேரில், தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் தொல்லையால் டெய்லர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Taylor ,Krishnagiri ,Vijayakumar ,Arupalli ,Thali ,Krishnagiri district ,Mayam ,Dinakaran ,
× RELATED திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி...