×

வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

சேலம், நவ.16: சேலம் சூரமங்கலம் அடுத்துள்ள நரசோதிப்பட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் விஜயகுமார் (34). இருவருக்கும் இடையே, வீட்டு வாசலில் பைக்கை நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் மதியம், வீட்டிற்கு வந்த சுரேஷ், தனது பைக்கை வாசலில் நிறுத்தினார். அப்போது அங்கு வந்த விஜயகுமார், ஏன் எனது வீட்டின் அருகில் பைக்கை நிறுத்துகிறீர்கள் எனக் கேட்டு சுரேசிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கிடையே வாய்த்தகராறு முற்றியதில், திடீரென வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த விஜயகுமார், சுரேசை வெட்டினார். அவர் கையால் தடுத்தபோது, கையில் வெட்டு விழுந்தது. உடனே அங்கிருந்து விஜயகுமார் தப்பிச்சென்றார். படுகாயமடைந்த சுரேசை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் எஸ்ஐ சூர்யா தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று விசாரித்தனர். பின்னர், சுரேஷ் அளித்த புகாரின் பேரில், விஜயகுமார் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Suresh ,Narasodipatti Pilliyar Temple Street ,Suramangalam, Salem ,Vijayakumar ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி