×

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

புதுச்சேரி, நவ. 16: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வயல்வெளி நகர் அருகே நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மூலகுளம் பகுதியை சேர்ந்த அன்பரசன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அன்பரசன் மீது போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

The post கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Vyalveli Nagar ,Puducherry Redyarpalayam Police Station ,
× RELATED புதுச்சேரியில் சபாநாயகர் மீதான...