×

இடைக்கோடு பேரூராட்சியில் சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு

அருமனை, நவ.16: அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சி 2வது வார்டில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மஞ்சாலுமூடு முதல் நெட்டையம் வரை புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் உமாதேவி ரிப்பன் வெட்டி புதிய சாலையை திறந்து வைத்தார். இதில் 2வது வார்டு கவுன்சிலர் சுதாகரன், முன்னாள் கவுன்சிலர் ராஜ், மஞ்சாலுமூடு ஊராட்சி உறுப்பினர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இடைக்கோடு பேரூராட்சியில் சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Arumani ,New Paverblock Road ,Manjalumudu ,Nettayam ,Group ,Ward ,Idikodu Baruratchi ,Dinakaran ,
× RELATED பத்துகாணி பகுதியில் 2 நாய்களை...