டெக்சாஸ்: 20 ஆண்டுகளுக்கு பின் குத்துசண்டையில் மீண்டும் களமிறங்கும் மைக் டைசன் அறிமுக விழாவிலே சக போட்டியாளரை தாக்கியதால் பரபரப்பு நிலவியது. முன்னாள் உலக சாம்பியன் மைக் டைசன் தனது 58வது வயதில் மீண்டும் குத்து சண்டையில் களமிறங்குகிறார் என அறிவித்ததுமே எதிர்பார்ப்பு எழுந்தது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் 31 வயது பிரபல யூடியூபரான குத்துசண்டை வீரர் ஜாக்பால் நாளை டைசனை எதிர்த்து களமிறங்குகிறார். போட்டியின் அறிமுக விழாவில் சக போட்டியாளரான ஜாக்கை மைக் டைசன் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு நிலவியது. போட்டிக்கு முன்னரே இருவர் இடையிலான மோதல் குத்துசண்டை கோதாவில் எதிர்ப்பார்வை எகிறவைத்துள்ளது.
ஹெவி வெய்ட் குத்து சண்டை போட்டியில் 44 முறை ஜாம்பியன் பட்டம் வென்றுள்ள மைக் டைசன் எதிராளியை நாக் அவுட் செய்வதில் பெயர்பெற்றவராக திகழ்ந்தார். 20 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மைக் டைசன் மீண்டும் குத்துச்சண்டை களத்துக்கு திரும்பி உள்ளதால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். போட்டியில் மைக் டைசன் நாக் அவுட் ஆவது உறுதி என ஜாக்பால் தெரிவித்துள்ளார். ஜாக்பால் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் எதிராளியை 7 முறை நாக் அவுட் செய்தது உட்பட 10 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார். அதே போல் டைசன் சிறந்த வீரர் என்றாலும் வயதை கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
The post குத்துச்சண்டையில் மீண்டும் களமிறங்கும் 58 வயது மைக் டைசன்: அறிமுக விழாவில் சக போட்டியாளரை தாக்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.