×

சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை போகவில்லை: வங்கி அதிகாரிகள் உறுதி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை போகவில்லை என்று வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள், வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியில் அதிகாரிகள், காவல்துறையினர் ஆய்வு செய்ததில் பணம், நகை கொள்ளை போகாதது உறுதியானது.

The post சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை போகவில்லை: வங்கி அதிகாரிகள் உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvallikeni State Bank of India ,State Bank of India ,Tiruvallikeni ,Thiruvallikeni State Bank of India ,
× RELATED தங்க முதலீட்டு திட்டத்தில் பழனி...