×

மில்க் துறையில் சோலார் பேனல் கான்டிராக்டருக்கு கோடி கணக்கில் செக் போட்டு கொடுத்த அதிகாரிகள் கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சென்னைக்கும் தூங்கா நகருக்கும் எதற்காக அதிகாரிகள் பறக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலை ஆட்சியில் தூங்கா நகர மாவட்ட ஆவினில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து அடுத்தடுத்து சர்ச்சைகள் உருவானது. திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிக்க நெய் அனுப்பியதாக கணக்கு காட்டியது முதல் பால் கொள்முதல், சோலார் பேனல் வாங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகள் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முறைகேடுகள் தொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள், ஆவின் இயக்குநர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். முறைகேடுகளுக்கான ஆவணங்களை உரிய ஆதாரத்துடன் இவர்கள் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இலை ஆட்சியில் பால்வளத்துறையின் மாஜி மில்க் மந்திரியாக இருந்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2 பெண் அதிகாரிகள், ஆவின் பொதுமேலாளராக நியமிக்கப்பட்டனர். அவர்கள் மூலம், மாஜி மந்திரிக்கு தேவையான கமிஷன் போனதாம். ஆவினில் அவர்கள் வைத்ததுதான் சட்டமாம். ஆவின் விதிமுறைக்கு புறம்பாக நிர்வாகம் செய்து, நேர்மையான அதிகாரிகளை இடமாற்றம் செய்வதும், ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு, பல கோடி சுருட்டியிருக்கும் தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து புகார்களாக குவிந்து கொண்டு இருக்கிறதாம். ‘‘தலைமறைவு’’ முன்னாள் அமைச்சர் கொடுத்த தைரியத்தால், அந்த பெண் அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டும், புகார் குறித்து, விசாரணை எதுவும் நடக்கலையாம். ஆட்சி மாற்றத்திற்குப்பின் தற்போது விஜிலென்ஸ், கமிஷனர் ஆய்வால், பெண் அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் என முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஆடிப்போய் இருக்கிறார்களாம். இதில் தற்போதுள்ள பொதுமேலாளரும், சோலார் பேனல் விவகாரத்தில், ஒப்பந்ததாரருக்கு ரூ.7 கோடிக்கு செக் போட்டு கொடுத்து கமிஷன் பார்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சோலார் பேனல் செக் விஷயத்தில் இருந்து தப்பிக்க சென்னையில் உள்ள அவர்களுக்கு ஆதரவான ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு காப்பாற்றுங்கள் என கெஞ்சி கூத்தாடி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கதர் கட்சியில் ஆர்வத்துக்கு ஒரு எல்லையே இல்லைபோல…’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026ல்தான் நடைபெறும். அதற்கு இப்போதே களமிறங்கி பணியாற்றி வருகிறார் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு அண்மையில் அந்த பகுதியில் இருந்து நீக்கப்பட்ட பெண் தலைவர். குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவு தனக்கு உண்டு என்பதால் எப்படியேனும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் கால்பதிக்க வேண்டும் என்று குளச்சல் அல்லது கிள்ளியூர் தொகுதியை குறி வைத்து சீட் பெற அவர் பணிகளை வேகப்படுத்தி வருகிறார். அவரை இப்போது தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு மாநில பொதுசெயலாளர் பதவியை கட்சி வழங்கியுள்ளது. இருந்தாலும் அடுத்த 2026ல் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு சீட் ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் அதில் தனக்கான இடத்தை பிடித்தே தீர வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறாராம். இதற்காக கட்சி மேலிடம் வரை பல தலைவர்களை சந்தித்து ஆதரவும் திரட்டி இப்போதே தனக்கான ஒரு ஆதரவு வட்டத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். இதனால் பதவியில் இருந்து வருகின்ற மூத்த நிர்வாகிகள் 2026ம் வருஷம் என்ன நடக்குதுனு யாருக்கு தெரியும்.. கையில காசு நிறைய இருந்தா இப்படி தான் செலவு செய்ய தோணும்… 26ம் வருஷம் வரட்டும் பார்க்கலாம் என்று முறுக்கிக்கொண்டு இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘நிலத்தை அளக்க… கரன்சி அள்ளி வரும் துறை நடுக்கத்தில் இருக்காமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குறிச்சி மாவட்டத்தில் சின்னதாக உள்ள சேலம் தாலுகா அலுவலகத்தில சர்வே துறை உள்ளிட்ட சில துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறதாம். இந்த தாலுகா அலுவலகத்தில் இதுவரை 2 சர்வேயர் உள்ளிட்ட 4 பேர் விஜிலென்சில மாட்டியும் இன்னும் லஞ்ச படலம் தொடர்ந்து கொண்டு இருக்கிறதாம். நில அளவை, பட்டா, பட்டா மாற்றம் போன்றவற்றிற்கு ஆன்லைனில் பதிவு செய்தால் போதாது, பணம் கொடுத்தால்தான் அளக்கும் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. பணம் கொடுக்கலைன்னா பைல் காணாமல் போய்விடும் என்ற நிலையும் உள்ளதாம். பணம் பெற்றுக்கொண்டும் விவசாயிகளை அலையவிடும் வேலையும் நடக்கிறதாம். இதனால் மீண்டும் விஜிலென்ஸ் வளையத்தில தாலுகா ஆபீஸ் உள்ளதாம். இதனால சர்வேயர்கள் நடுக்கத்தில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post மில்க் துறையில் சோலார் பேனல் கான்டிராக்டருக்கு கோடி கணக்கில் செக் போட்டு கொடுத்த அதிகாரிகள் கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Gili ,Chennai ,Dongnagarh ,Uncle ,Peter ,Dunga Nagar district ,Avinil ,Ilai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...