×

பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம்

பரமக்குடி,நவ.15: பரமக்குடி தெற்கு நகர திமுக சார்பில், பாகமுகவர்கள் மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று பரமக்குடி தெற்கு நகர திமுக சார்பாக பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் பரமக்குடி தெற்கு நகர செயலாளர் சேது கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பணி குழு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்எம்டி அருளானந்த், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சன் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கொடி சந்திரசேகர், பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி பணி மற்றும் தேர்தல் காலங்களில் ஆற்றக்கூடிய செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இளைஞர் அணி நிர்வாகி துரைமுருகன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஹை லுக் சண்முகம், நகர் மன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கிளைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர் துணைச் செயலாளர் மும்மூர்த்தி நன்றி கூறினார்.

The post பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Paramakkudi ,Paramakkudi South City DMK ,Paramakkudy ,Paramakudi South ,Dinakaran ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி