×

போதை தடுப்பு விழிப்புணர்வு

சாயல்குடி, நவ.15: முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் சார்பில், போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ரஜியாபானு தலைமை வகித்தார். எஸ்.ஐ சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்மங்களநாதன் வரவேற்றார். இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கஞ்சா மற்றும் நவீன காலத்து போதை வஸ்துகள், தீங்கிழைக்கும் உடல் வலி நிவாரணிகள், உடலுக்கும் மனதின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கின்ற மருந்து, மாத்திரைகள் போன்ற போன்றவை குறித்தும், அவற்றின் தீமைகள், சமூதாயத்தில் நடக்கின்ற குற்றச்செயல்கள் எதிர்காலத்தை பாதிக்கும் அபாயம் குறித்தும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஊர் பகுதிகளில் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மறைமுக விற்பனை நடந்தால், அல்லது கவனத்திற்கு வந்தால் மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இறுதியில் விஜயலெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

The post போதை தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,N. S. On S ,Rajiabanu ,S. I Suresh Kumar ,N. S. S ,Dinakaran ,
× RELATED மாவட்ட கோயில்களில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை