×

தமிழ்நாடு கிராம வங்கியில் ‘அற்புதம் 555’ புதிய வைப்பு நிதி திட்டம் அறிமுகம்

நெல்லை, நவ.15: தமிழ்நாடு கிராம வங்கியானது அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் ‘அற்புதம் 555’ என்ற புதிய வைப்பு நிதித்திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. சேலத்தில் வங்கி தலைமை
அலுவலகத்தில் நடந்த இந்த திட்டத்தை வங்கியின் தலைவர் மணி சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 555 தினங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீத வட்டியும் மற்றவர்களுக்கு 7.75 சதவீத வட்டியும் கிடைக்கும் என்றும் அனைத்து பொதுமக்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டு கொண்டார். இத்திட்டம் 11.11.2024 முதல் 31.01.2025 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு கிராம வங்கியில் ‘அற்புதம் 555’ புதிய வைப்பு நிதி திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Grama Bank ,Nellai ,Mani Subramanian ,Salem ,
× RELATED நெல்லை நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு..!!