×

திமுக இளைஞரணி சார்பில் தென்காசியில் சமூக வலைதள பயிற்சி முகாம்

தென்காசி,நவ.15: தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு சமூக வலைதள பயிற்சி முகாம் நடந்தது. இதில் முகாமிற்கு மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராஜா தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் இளமாறன், பொள்ளாச்சி சித்திக் ஆகியோர் சமூக வலைதள பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், ஐவேந்திரன் தினேஷ், சுப்பிரமணியன் உட்பட 270க்கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது அப்துல் ரஹீம் நன்றி கூறினார்.

The post திமுக இளைஞரணி சார்பில் தென்காசியில் சமூக வலைதள பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,DMK ,South District DMK ,State Youth League ,Deputy Secretary ,Raja ,DMK Youth Social Media Training Camp ,Dinakaran ,
× RELATED தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை