×

கலைஞர் கடன் உதவி திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை, நவ. 14: கலைஞர் கடன் உதவி திட்டத்தில் கடன் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளையில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு ‘கலைஞர் கடன் உதவி’ திட்டத்தின் கீழ் 7 சதவீத வட்டியில் 20 லட்சம் வரை குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 65 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள் தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் 2 ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக்கொள்ளலாம். கோவை மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

The post கலைஞர் கடன் உதவி திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Krantikumar Badi ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கோவை அருகே அமர்ந்த நிலையில் இறந்த யானை