- உறவுகள் முகாம்
- புண்ணியவயல் வருவாய் கிராமம்
- புதுக்கோட்டை
- மாவட்ட கலெக்டர்
- அருணா
- ஆவுடையார்கோவில் வட்டம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- ஆவுடையார்கோயில் வட்டம்
- புண்ணியவயல்
- வருவாய்
- பொது உறவுகள் முகாம்
- கிராமம்
- தின மலர்
புதுக்கோட்டை, நவ .14: ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில்நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 490 பயனாளிகளுக்கு ரூ.5.97 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர்அருணா, தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை, வனத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 490 பயனாளிகளுக்கு ரூ.5,96,61,415 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் குறைகளை மனுக்களாக தீர்வு காணும் நோக்கத்தில் மாதந்தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்றையதினம் (நேற்று) புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில், தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, தமிழக அரசு மூலம் செயல்படுத்திவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்துகொண்டு பயனடையலாம். மேலும், இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்.
அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுவின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்று நடைபெறும் முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அருணா பேசினார்.
மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர், வனத்துறை சார்பில், தெற்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்த மீனவர் கருப்பையா என்பவர் கடந்த 12.08.2024 அன்று, தன்னுடைய மீன் வலையில் சிக்கிய கடற்பசுவினை பத்திரமாக மீட்டு, மீண்டும் கடலில் விட்டதற்காக அவருக்கு இழப்பீடுத் தொகை மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையினை வழங்கினார். இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
The post புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் : R5.97 கோடி நலத்திட்ட உதவி: 490 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.