×

கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ விழா

கந்தர்வகோட்டை, நவ.14: கந்தர்வகோட்டை நகரில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பிரதோஷதை முன்னிட்டு கோயிலுக்கு ஏராளமானோர் வருகை வந்து இறைவழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளையும் கோயில் குருக்கள் பாலு செய்திருந்தார்.

The post கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Pradosha ,Gandharvakot Shiva temple ,Gandharvakottai ,Aradhana ,Nandeeswarar ,Amaravati Amman Udanurai Apadsakayeswarar temple ,Neydeep ,
× RELATED கந்தர்வகோட்டை ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு