×

ஐப்பசி வளர்பிறை பிரதோஷ வழிபாடு

பாப்பிரெட்டிபட்டி, நவ.14: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் கிராம மலைக்கோயில் அடிவாரத்தில் அமிர்தேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், நேற்று ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், நந்திபெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பையர்நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post ஐப்பசி வளர்பிறை பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Aipasi ,Varakirai ,Paprirettipatti ,Amirdeswarar Temple ,Bhayarnatham Village ,Paprirettipatti circle ,Swami ,Vaparirai Pradosha ,Aippasi ,Nandi Lord ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை