×

மழையால் வல்லிபுரம், வாயலூர் பகுதிகளில் நிரம்பி வழியும் பாலாற்று தடுப்பணைகள்

திருக்கழுக்குன்றம், நவ.14: திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, வல்லிபுரம், வாயலூர் பகுதிகளில் உள்ள பாலாற்று தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்து வருகின்ற தொடர் கனமழையால் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளில் பட்டரைக்கழனி ஏரி தனது முழு கொள்ளவு நிரம்பியுள்ளது. இதில், 65 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியும் உள்ளது.

அதேப்போல், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 115 குளங்களில் 80க்கும் மேற்பட்ட குளங்கள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளது. தாலுகாவிற்கு உட்பட்ட பாலாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வல்லிபுரம் மற்றும் வாயலூர் பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது. தொடர் கனமழை, காரணமாக சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், கல்பாக்கம், கடலூர் பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடலில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளை கடற்கரை மட்டத்திற்கு அப்பால் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

The post மழையால் வல்லிபுரம், வாயலூர் பகுதிகளில் நிரம்பி வழியும் பாலாற்று தடுப்பணைகள் appeared first on Dinakaran.

Tags : Vallipuram ,Vayalur ,Thirukkalukkunram ,Thirukkalukunram ,Kalpakkam ,
× RELATED ஏ.சி.சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து