×

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் தீ விபத்தால் பரபரப்பு

திருவொற்றியூர், நவ. 14: எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் புதிய அனல்மின்நிலைய திட்ட விரிவாக்கப்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தற்போது நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் இந்த அனல் நிலையத்தில் மின்சாதன பாகங்கள் வைத்திருக்கும் அறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. தீவிபத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 2 வாகனத்தில் வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த மின்வயர் மற்றும் பல்வேறு மின்சாதன பொருட்கள் எரிந்து சாம்பலானது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எண்ணூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post எண்ணூர் அனல்மின் நிலையத்தில் தீ விபத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ennore Analytical Power Station ,Tiruvottiyur ,Ennore Kathivakkam highway ,
× RELATED திருவொற்றியூர் சாலையோரம் ஏடிஎம்...