×
Saravana Stores

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்

சிவகங்கை, நவ. 14: கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT,IIM,IIIT,NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபின மாணவ, மாணவிகள் 2024 & 25ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2லட்சம் வரை கல்வி உதவித் தொகை பெறலாம். ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை 5, என்ற முகவரியிலுள்ள அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,Tamil Nadu ,IIT ,IIM ,IIIT ,NIT ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்