×

தாராபுரம் அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் செல்வராஜ் (54). கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சுரேஷ்குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்வார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த அவர் கடந்த 5 நாட்களாக காணவில்லை. தொடர்ந்து அவரது மனைவி ஈஸ்வரியின் புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் செல்வராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அமராவதி ஆற்று பாலத்தின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் செல்வராஜூக்கு நீச்சல் தெரியாது என்றும், அமராவதி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளிப்பதற்கு முயற்சி செய்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் கிடைத்த தகவலை வைத்து வழக்கு பதிவு செய்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

The post தாராபுரம் அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Selvaraj ,Kondarasampalayam ,Tirupur district ,Iswari ,Suresh Kumar ,
× RELATED திருச்செந்தூர் சென்று திரும்பியபோது...