×
Saravana Stores

காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி ஆய்வு

 

ஊட்டி, நவ. 13: காவல்துறையில் இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதா, தொடர்ந்து இயக்குவதற்கு தகுதியானதாக உள்ளதா என்பது குறித்து ஆண்டு தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்யும் நிகழ்வு ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. நீலகிரி மாவட்ட எஸ்பி நிஷா, அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார்.

அப்போது, சிறந்த முறையில் வாகனங்களை பராமரித்து வரும் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, பேரிடர் காலங்களில் காவல் ரோந்து வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், மாவட்ட குற்ற ஆவண பிரிவு துணை கண்காளிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர், ஆயுதப்படை பிரிவு காவல் ஆய்வாளர் சரண்யா மற்றும் அனைத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவலர்கள் மற்றும் காவல் வாகனங்களை இயக்கும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

The post காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : SP ,Ooty ,Nilgiri district… ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை கலெக்டர் ஆய்வு