×

புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

 

கோவை, நவ. 13: இந்தியா முழுவதும் 76வது தேசிய மாணவர் படை தினம் வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி, கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை பிரிவு சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு, உறுதிமொழி, பேரணி போன்றவைகள் நடத்தப்பட்டன.

இதில், மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், தேசிய மாணவர் படை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியர்கள் இருதய ராஜேந்திரன், வளவன், தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Anti-Tobacco Awareness Rally ,Coimbatore ,76th National Student Corps Day ,India ,National Student Corps ,Dinakaran ,
× RELATED கோவை அருகே அமர்ந்த நிலையில் இறந்த யானை