×

சுரண்டை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

சுரண்டை,நவ.13: சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி மகன் மைக்கேல் (26). இவர் நேற்று முன்தினம் மீன் பிடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஊரின் கீழ் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ஊர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளியான கிருஷ்ணன் மகன் முருகன் (47) என்பவருக்கும், மைக்கேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே மைக்கேல் திடீரென அரிவாளால் முருகனை தலையில் வெட்டியுள்ளார். இதில் முருகனுக்கு வலது கண்ணிற்கு மேல் புறமாக ஆழமாக வெட்டு விழுந்தது. வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேலை கைது செய்தனர்.

The post சுரண்டை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Scythe ,Surandai ,Mani Makan Michael ,Easwari Amman temple street ,Dinakaran ,
× RELATED சேர்ந்தமரம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் காயம்