×

முன்விரோத தகராறில் பெண் வெட்டி கொலை: கணவர் படுகாயம்

துரைப்பாக்கம்: திருவொற்றியூரில் முன்விரோதத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார். திருவொற்றியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரி (55). இவருடைய மனைவி கவுரி (50). இவர் அதே பகுதியில் சாலையோரம் காய்கறிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை கணவன், மனைவி இருவரும் கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவுரி உயிரிழந்தார். மேலும், மாரிக்கு தலை மற்றும் கையில் வெட்டு விழுந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவுரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெட்டு காயமடைந்த மாரியை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் வெட்டிய அதே பகுதியை சேர்ந்த சேகர் (52) என்பவரை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில், இவர் அப்பகுதியில் ரிக்‌ஷா ஓட்டும் வேலை பார்த்து வந்ததும், இவருக்கும், கவுரிக்கும் ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டு, கவுரி சேகரை தாக்கியதும், இதில் ஆத்திரத்தில் இருந்த சேகர் கவுரியையும், அவருடைய கணவரையும் கத்தியால் வெட்டியதும் தெரிய வந்தது. உடனடியாக சேகரை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சன்னதி தெருவில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முன்விரோத தகராறில் பெண் வெட்டி கொலை: கணவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Thiruvottiyur ,Mari ,Tiruvottiyur Sannathi Street ,Gauri ,
× RELATED எலக்ட்ரீஷியனிடம் செயின் பறிப்பு