×

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 23ம் தேதி கிராம சபைக் கூட்டம்

திருவள்ளூர்: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்துகொள்வது முக்கிய கடமையாகும். கிராம சபைக் கூட்ட விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 23ம் தேதி கிராம சபைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Local Government Day ,Tiruvallur ,Collector ,Prabhu Shankar ,
× RELATED மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழப்பு