நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த சனிக்கிழமை ‘வேட்டையன்’ மற்றும் ‘கோட்’ திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
இதனை எதிர்த்து அப்பகுதியில் உள்ள மக்கள் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலரிம் புகார் அளித்த நிலையில் பள்ளியில் திரைப்படங்கள் திரையிடப்பட்டது குறித்து இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதற்காக பள்ளி மாணவிகளிடம் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ‘வேட்டையன்’ திரைப்படமும், 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ‘கோட்’ திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மாணவிகளிடம் பெற்ற பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தாவல் வெளியாகியுளளது.
The post நெல்லையில் உள்ள பள்ளியில் வேட்டையன், கோட் திரைப்படம் திரையிடப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை appeared first on Dinakaran.