×

தஞ்சையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தஞ்சாவூர், நவ. 12: தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயிலில் மாமன்னன் ராசராசசோழன் 1039-வது ஆண்டு சதய விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்.

கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான திட்டங்களான புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், இன்னுயிர் காப்போம். மக்களைத்தேடி மருத்துவம், மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி கலைஞரின் கனவு இல்லம், மகளிருக்கான விடியல் பயணம், விவசாயிகளுக்கான புதிய மின் இணைப்புகள், உங்களைத்தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா? போன்ற திட்டங்களின் பயன்பாட்டை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், சதய விழாக் குழுத்தலைவர் செல்வம், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், இந்து சமய அறநிலைதுறை உதவி ஆணையர் கவிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Achievement Photo Exhibition ,Thanjavur ,Collector ,Priyanka Pankajam ,Tamil Nadu government ,Mamannan Rasarasacholan ,Thanjavur Peruvudayar temple ,
× RELATED தஞ்சாவூர் அருகே அறுவடை செய்யப்பட்ட...