- யூனியன் அரசு மத்திய பல்கலைக்கழகம்
- திருவாரூர்
- தமிழ்நாடு நடுவண் பல்கலைக்கழகம்
- நீலக்குடி
- மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை
திருவாரூர்: திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2,750 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 75 சதவீதம் பேர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பல்கலைகழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்காக தனியார் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உணவில் புழு, பூச்சிகள் கிடந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், பேராசிரியர்களை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு சமயலறை மற்றும் குடிநீர் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தக்காளியில் புழு இருந்ததை ஊழியர்கள் கவனிக்காமல் சமைத்திருப்பது தெரியவந்துள்ளது. சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
The post திருவாரூர் அருகே ஒன்றிய அரசின் மத்திய பல்கலை விடுதி உணவில் புழு, பூச்சிகள்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.