×
Saravana Stores

குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

 

ராமநாதபுரம், நவ.12: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 348 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தாட்கோ துறையின் மூலம் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 6 பேருக்கு கல்வி உதவித்தொகையும், ஒருவருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.33,250க்கான காசோலையினை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தனலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, மாவட்ட தாட்கோ மேலாளர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,People's Grievance Day ,Collector ,Simranjeet Singh Kalon.… ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 280 மனுக்கள் பெறப்பட்டன