- குண்டும் குழியுமான கடற்கரை சாலை
- முப்பதாராப்பூண்டி
- திருத்துறைப்பூண்டி
- தூத்துக்குடி
- சாயல்குடி
- ராமநாதபுரம்
- தொண்டி
- Meemisal
- Devipatnam
- Katumavadi
- சேதுபாசத்திரம்
- அதிரா பட்டினம்
- முத்துப்பேட்டை
- திருமூர்த்தபோண்டி
- வேளாங்கண்ணி
- நாகப்பட்டினம்
- நாகூர்
- காரைக்கால்
- தரங்கம்பாடி
திருத்துறைப்பூண்டி நவ 22: திருத்துறைப்பூண்டி பகுதியில் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது தூத்துக்குடி, சாயல்குடி, ராமநாதபுரம், தொண்டி, மீமிசல், தேவிப்பட்டினம், கட்டுமாவடி, சேதுபாசத்திரம், அதிரா பட்டினம், முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர், காரைகால், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக சென்னை செல்லகிழக்கு கடற்கரை சாலை அமைத்து 16 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விரைந்து செல்லவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போவதற்கும் இந்த சாலையை பயன்படுத்துக்கின்றனர். தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாகனம் வரை சென்று வருகிறது. தற்போது வைத்தீஸ்வரன் கோயில் முதல் கடலூர் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி முடிந்துவிட்டது. வைத்தீஸ்வரன் கோயில் முதல் நாகப்பட்டினம் வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் முதல் முத்துப்பேட்டை வரை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குண்டும் குழியுமாக இருந்த இடங்கள் வடகிழக்கு பருவமழையில் சேதம் அடைந்து மழை நேரங்களில் குழிகள் தெரியாமல் வாகனஒட்டிகள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்.
எனவே மழையில் சேதம் அடைந்த கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்கவேணடும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
The post திருத்துறைப்பூண்டியில் குண்டும் குழியுமான கடற்கரை சாலை appeared first on Dinakaran.