×

கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி!

மதுரை: செல்லுார் கண்மாய் வலது புற கரையிலிருந்து வைகை ஆறு வரை ரூ.15 கோடி மதிப்பில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். கண்மாயின் தலை மதகு மூலம் 1090 கனஅடி நீரை வெளியேற்ற 290 மீ. நீளத்துக்கு மூடிய கால்வாயாக கட்டப்படுகிறது.

செல்லூர் கண்மாயின் மூடிய கால்வாய் திட்டத்துக்கு அக்.30-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கினார். 2 மாதங்களில் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், கால்வாய் அமைக்கப்பட்ட பின்பு கூடுதலான தண்ணீர் செல்லூர் கண்மாயிலிருந்து ஆற்றுக்கு நேரடியாக கொண்டு செல்வதால் செல்லூர் மக்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

The post கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி! appeared first on Dinakaran.

Tags : Minister of Commercial Taxation ,Murthy ,Madurai ,Celur Kanmai ,Vaigai Six ,Eye Head Vinegar ,Dinakaran ,
× RELATED துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி...