×
Saravana Stores

பெரம்பலூர் அருகே கஞ்சா விற்ற மளிகை கடைக்காரர் கைது

பெரம்பலூர், நவ. 11: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் கிராமத்தில், கீழத்தெரு, ரமணி மகன் குமரன்(42) என்பவர் தனக்கு சொந்த மான மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. தொடர்ந்து தனிப்படையின் எஸ்எஸ்ஐகள் சிவக்குமார், ரமேஷ் மற்றும், போலீசார் வெங்கடேசன்,ராஜீவ்காந்தி ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் குமரனை கைது செய்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர்.

மங்களமேடு சப்.இன்ஸ் பெக்டர் மார்டின்ராஜ், மளிகை கடைக்காரர் குமரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் 40 பாக்கெட், கூல்-லிப் 19 பாக்கெட், விமல் பான் மசாலா 65 பாக்கெட், மற்றும் V1 65 பாக்கெட் ஆகிய குட்கா பொருட் களை பறிமுதல் செய்து குமரனை குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவல கத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாது காப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்தாய்வு நடத்தினார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சட்டம் ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

The post பெரம்பலூர் அருகே கஞ்சா விற்ற மளிகை கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Ramani Makan Kumaran ,Valikandapuram Village, Vepanthatta Taluk, Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே