- அங்கன்வாடி பணியாளர் சங்க செயற்குழு கூட்டம்
- நெல்லை
- அங்கன்வாடி
- சிட்டு சங்கம்
- நிர்வாகி
- குழு
- பிரேமா
- மாவட்ட செயலாளர்
- ஞானம்மல்
- சிஐடியு
- முருகன்
- மாநில துணைத் தலைவர்
- தின மலர்
நெல்லை,நவ.11: நெல்லையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சிஐடியு சங்க நிர்வாக குழுக்கூட்டம் மாவட்ட குழு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரேமா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானம்மாள், சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன், மாநில உதவி தலைவர் செண்பகம், மலைபகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 14ம் தேதி மாநிலம் முழுவதும் வட்டாரம் வாரியாக மனித சங்கிலி இயக்கம் நடத்துவது. நெல்லை மாவட்டம் பாளை, பாப்பாக்குடி, அம்பை, காளக்காடு, நாங்குநேரி, மானூர், சேரன்மகாதேவி, ராதாபுரம் ஆகிய வட்டாரங்களில் மாநில குழு அடிப்படையில் அங்கன்வாடி திட்டம் துவங்கிய காலம் முதல் பணிசெய்து வரும் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்காத நிலைதொடர்கிறது. இதனை கண்டித்து மாநிலம் தழுவிய மனித சங்கிலி இயக்கம் நடத்த நிர்வாக குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட பொருளாளர் ஜீலிற்றா நன்றி கூறினார்.
The post அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாக குழுக்கூட்டம் appeared first on Dinakaran.