×

வேளாண் கல்லூரி மாணவர்களை தவிர்த்து வேறு அமைப்பு மூலம் டிஜிட்டல் பயிர் சர்வே: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: டிஜிட்டல் பயிர் சர்வேயை வேறு அமைப்புகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை :
தமிழ்நாடு முழுவதும் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் வேளாண் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவும், நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன் நிலங்களை டிஜிட்டல் முறையில் சர்வே செய்வதற்கு ஒன்றிய அரசு ஆணையிட்டுள்ளது. இதற்காக அக்ரிஸ்டாக் என்ற அறக்கட்டளையை உருவாக்கி உள்ள ஒன்றிய அரசு அதன் வாயிலாக இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளை கோரியுள்ளது.

கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. ஒன்றிய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு டிஜிட்டல் பயிர் சர்வே பணியை வேறு அமைப்புகள் மூலம் தமிழக அரசு செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வேளாண் கல்லூரி மாணவர்களை தவிர்த்து வேறு அமைப்பு மூலம் டிஜிட்டல் பயிர் சர்வே: அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anbumani ,Bhamaka ,President ,Tamil Nadu ,
× RELATED பொது இடங்களில் புகைக்கு தடை சட்டத்தை...