×

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: கிண்டி, அண்ணாசாலை, அண்ணாநகர், பொன்னேரி கோட்டங்களில் நாளை காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அண்ணாசாலை கோட்டத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை செயற் பொறியாளர் அலுவலகத்திலும், அண்ணாநகர் கோட்டத்திற்கு 5வது தெரு, எச் – பிளாக்கில் உள்ள அலுவலகத்திலும், கிண்டி கோட்டத்திற்கு நங்கநல்லூர், இந்து காலனி செயற் பொறியாளர் அலுவலகத்திலும், பொன்னேரி கோட்டத்திற்கு வேண்பாக்கம், டி.எச். சாலையில் அமைந்துள்ள 33 /11 கி.வோ. துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள பொன்னேரி கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறும். பொதுமக்கள் கலந்து கொண்டு, மின் விநியோகம் தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Guindy ,Annasalai ,Annanagar ,Ponneri ,Annasalai Division ,Chindathiripet ,Annanagar Division ,5th Street, H-Block, Kindi ,
× RELATED அண்ணா பல்கலை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 200 போலீசார்