×

அண்ணா பல்கலை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 200 போலீசார்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக பல்கலைக்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா பல்கலைக்கழகம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயும் நுழைவு வாயில்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், வெளிநபர்கள் சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களை அடையாள அட்டையை பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். அதேபோல, ஏதாவது உடைமைகள் கொண்டு வந்தால் அவற்றையும் சோதனைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர். போலீஸ் கெடுபிடியால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

The post அண்ணா பல்கலை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 200 போலீசார் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Guindy, Chennai ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை...