×

மயிலாடும்பாறை அருகே 40 லிட்டர் கள்ள சாராயம் ஊறல் பறிமுதல்

வருசநாடு: கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்ணாத்திப்பாறை மலை கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கடமலைக்குண்டு பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் ரகு மற்றும் போலீசார் பாலமுருகன், முத்தையா ஆகியோர் கொண்ட குழு மந்திச்சுனை – மூலக்கடை ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமங்களில் ரோந்து பணி சென்றனர்.

வண்ணாத்தி பாறை மலை கிராமத்தில் உள்ள காட்டிற்கு பின்புறம் பிளாஸ்டிக் கேனில் 40 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் இருந்துள்ளது.  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடமலைக்குண்டு பாலூத்து கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (50) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து கள்ளச்சாராயம் ஊறலை பறிமுதல் செய்து குமரேசனை கைது போலீசார் செய்தனர்.

The post மயிலாடும்பாறை அருகே 40 லிட்டர் கள்ள சாராயம் ஊறல் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mayiladumparai ,Varusanadu ,Vannathiparai ,Kadamalaikundu ,Raghu ,Balamurugan ,Muthiah mandithunai ,Dinakaran ,
× RELATED வருசநாடு அருகே மழைக்கு இடிந்து விழுந்த மண்சுவர் வீடு