- கன்னிவாடி அரசு பள்ளி
- ரெடியார்சத்திரம்
- கன்னிவாடி அரசு பாய்ஸ் உயர்நிலைப்பள்ளி
- கண்ணிவாடி
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- கரீசல்பட்டி
- குயவநாயக்கன்பட்டி
- கோவிந்தபுரம்
- தேதுபட்டி
- பன்னபட்டி
- தின மலர்
ரெட்டியார்சத்திரம், நவ. 11: கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அகற்றப்படாமல் உள்ள கட்டிட இடிபாடுகளால் மாணவர்கள் சிரமமடைகின்றனர். கன்னிவாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. கன்னிவாடி மற்றும் அருகில் உள்ள கரிசல்பட்டி, குய்யவநாயக்கன்பட்டி, கோவிந்தாபுரம், தெத்துப்பட்டி, பண்ணைப்பட்டி, வெள்ளமருத்துப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் இருந்த பழைய வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
ஆனால் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பின்னர், அவற்றில் இருந்த கதவுகள், ஜன்னல்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்து சென்றுவிட்டனர். கட்டிடத்தின் அடித்தள கருங்கற்கள், உடைந்த செங்கற்கள் அகற்றப்படாமல் பள்ளி வளாகம் முழுவதும் பரப்பி கிடக்கின்றன. இதனால் திறந்தவெளியில் அமர்ந்து படிக்கவோ, விளையாட முடியாமல் மாணவர்களால் சிரமமடைகின்றனர். மாணவர்கள் நலன் கருதி, கட்டிட இடிபாடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கன்னிவாடி அரசு பள்ளி வளாகத்தில் கட்டிட இடிபாடுகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.