×
Saravana Stores

குப்பை தொட்டியாக மாறிய மாநகராட்சி கிணறு

 

புழல், நவ. 11: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் புழல் 24வது வார்டுக்கு உட்பட்ட புழல் புனித அந்தோனியார் நகர் 2வது குறுக்குத் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றை நாளடைவில் பகுதி மக்கள் பயன்படுத்தாததால் அதில் குப்பைகள் போட்டு குப்பை கிணறு போல் மாற்றியுள்ளனர். பின்னர் இந்த இடத்தில் புழல் மின்சார துறையின் சார்பில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் வைக்கப்பட்டது. பக்கத்தில் தனியார் துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியும் உள்ளன.

கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதனால் தனியார் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தொற்று நோய் பரவும் முன்பு கிணத்தில் உள்ள குப்பைகளை அகற்றி கிணற்றை முழுவதும் மூடிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டாத அளவுக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புழல் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post குப்பை தொட்டியாக மாறிய மாநகராட்சி கிணறு appeared first on Dinakaran.

Tags : Puzhal ,street ,Puzhal St. Anthony Nagar ,Madhavaram Mandal, Chennai Corporation ,
× RELATED புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில்...