×

கடமலை மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி தீவிரம்

வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, மூலகடை உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் பயிர்களை முறையாக வளர்ப்பதற்கு கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கனமழை பெய்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. தொடர் மழையால் மானாவாரி நிலங்களில் விவசாய பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம் என்றனர்.

The post கடமலை மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kadamala Mailai Union ,Varusanadu ,Kadamala ,Mailai Union ,Kadamalaikundu ,Mayiladumpara union ,Kandamanur ,Mayiladumparai ,Moolakadai ,
× RELATED வருசநாடு அருகே மழைக்கு இடிந்து விழுந்த மண்சுவர் வீடு