×
Saravana Stores

சென்னை மலர் கண்கட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகள் தயார் செய்யும் பணி

ஊட்டி, நவ. 10: சென்னையில் நடக்கவுள்ள மலர் கண்கட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகள் தயார் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த இந்த மலர் கண்காட்சி பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். அதேபோல் கொடைக்கானலில் உள்ள பிரைட் பூங்காவிலும் மலர்க்கும் காட்சி நடத்தப்படுகிறது.

இதனையும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இந்த இரு மலர் கண்காட்சியும் கோடை காலங்களில் நடத்தப்படும் நிலையில் தற்போது சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவிலும் ஆண்டு தோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண் காட்சி நடத்தப்படுகிறது. இதனையும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவிலிருந்து மலர் செடிகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

இந்நிலையில், அடுத்த மாதம் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தற்போது அனைத்து பூங்காக்களிலும் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிலும் இதற்காக மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டெய்சி, மேரி கோல்டு உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு கொண்டு செல்ல உள்ளனர்.

The post சென்னை மலர் கண்கட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகள் தயார் செய்யும் பணி appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Chennai Flower Show ,Ooty ,Ooty Botanic Gardens ,Chennai ,Nilgiris ,Ooty Botanical Garden for Chennai Flower Exhibition ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் கூடுதல் நாட்கள் வைக்க முடிவு