×

நீடாமங்கலம் மாணவர்கள் உற்பத்தி செய்த மரக்கன்றுகள் மக்களுக்கு வழங்கல்

நீடாமங்கலம், நவ.10: நீடாமங்கலம் பள்ளி மாணவர்கள் வளர்த்து உருவாக்கிய மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் மூலம் சென்ற மாதம் பள்ளி மாணவர்களுக்கு விதைகளிலிருந்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, வளர்க்கும் பயிற்சி நடத்தப்பட்டது. அதில், விதைகள், பைகள் மற்றும் இயற்கை உரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது. அந்த முயற்சியின் விளைவாக நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வளர்த்த விதைகள் மரக்கன்றுகளாக உருவாகி அதனை மற்ற மாணவர்களுக்கு பரிசாக வழங்கி மகிழ்ந்தனர்.

சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்து வரும் மாணவர்களுக்கு நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. நீடாமங்கலம் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி பெரம்பூர் மற்றும் அரசு உதவிபெறும் மணிமேகலை நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தாங்கள் ஒரு மாதமாக பராமரித்து வளர்த்த புங்கள் மரக்கன்றுகளை மற்றவர்களுக்கு வழங்கியும், புதிதாக 500 மரக்கன்றுகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

The post நீடாமங்கலம் மாணவர்கள் உற்பத்தி செய்த மரக்கன்றுகள் மக்களுக்கு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Service ,
× RELATED நீடாமங்கலம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்