×

சுகாதார வளாகம் திறப்பு

பரமக்குடி,நவ.10: பரமக்குடி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார். பரமக்குடி பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து, பயன்பாடு இன்றி இருக்கிறது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் புதிய சுகாதார வளாகம் கட்டித் தரவேண்டும் என அந்தப் பகுதி நகர்மன்ற உறுப்பினர் வடமலையான், வைத்த கோரிக்கையை ஏற்று பரமக்குடி நகராட்சி சார்பாக ரூ.34.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இதனை நேற்று, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணை தலைவர் குணா, நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், வடமலையான், பழனிகுமார், மோகன், ராஜலட்சுமி, சதீஷ்,பிரபா சாலமன், ரமேஷ், ராதா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சுகாதார வளாகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,MLA Murugesan ,Paramakkudy bus station ,Paramakkudy Bus Stand ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி