×

ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நாமும் கடுமையாக உழைப்போம்.. நமது ஆட்சியை நிறுவுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி

சென்னை: ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நாமும் கடுமையாக உழைப்போம்.. நமது ஆட்சியை நிறுவுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி ஏற்றுள்ளார். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார். மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக இன்று காலை தொடங்கியது.சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி ஏற்றுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம்! தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம்… நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் நாமும் கடுமையாக உழைப்போம்.. நமது ஆட்சியை நிறுவுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி appeared first on Dinakaran.

Tags : Rajaraja Cholan ,CHENNAI ,PMK ,Anbumani Ramadoss ,Tanjore ,Mamanan ,Rajarajacholan Aipasi ,Bamaka ,Rajarajacholan ,
× RELATED உங்க வீட்டிலே ஆம்பளைங்களே இல்லையா?...