×

12 ஆண்டுகளாக பயன்படுத்திய காரை அடக்கம் செய்த குஜராத் தொழிலதிபர்

அம்ரேலி: குஜராத் மாநிலம்,அம்ரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய் போலாரா. விவசாயியான இவருக்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. சூரத் நகரில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் ஒரு காரை பயன்படுத்தி வந்தார். பல ஆண்டுகள் அதை பயன்படுத்தியதால் அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் காரை விற்று விடலாம் என பலர் கூறியுள்ளனர். அந்த கார் வாங்கிய பிறகு தான் சஞ்சய் போலாராவுக்கு அதிர்ஷ்டம் அடித்து ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளார்.

இதையடுத்து, காரை அடக்கம் செய்வது என வித்தியாசமான முடிவெடுத்தார். இறுதி சடங்கு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதையொட்டி கார் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதில், ஆன்மீக பிரமுகர்கள் உட்பட 1500 பேர் கலந்து கொண்டனர். அதன் பிறகு இறுதி சடங்குகள் செய்த பின்னர் தனது விவசாய நிலத்தில் காரை புதைத்தார். காருக்கு இறுதி சடங்கு செய்யும் நிகழ்வுகள் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

The post 12 ஆண்டுகளாக பயன்படுத்திய காரை அடக்கம் செய்த குஜராத் தொழிலதிபர் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Amreli ,Sanjay Polara ,Amreli district, Gujarat ,Surat ,Dinakaran ,
× RELATED வீட்டுக்கு வந்த பார்சலில் பயங்கரம்...