- குஜராத்
- அகமதாபாத்
- பல்தேவ் சுகாடியா
- சபர்மதி
- அகமதாபாத் மாவட்டம், குஜராத்
- குஜராத் உயர்நீதிமன்றம்…
- தின மலர்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வீட்டுக்கு வந்த பார்சல் வெடித்ததில் வீடு சேதம் அடைந்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் சபர்மதி பகுதியில் வசித்து வருபவர் பல்தேவ் சுகாடியா. குஜராத் உயர் நீதிமன்ற வக்கீலிடம் எழுத்தராக பணியாற்றி வந்தார். பல்தேவும் அவரது சகோதரர் கிரிட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர் வீட்டுக்கு நேற்று காலை 10.45 மணிக்கு கவுரவ் காதவி என்பவர் எலக்ட்ரானிக் சர்க்யூட், பேட்டரிகள் அடங்கிய ஒரு பார்சலை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அப்போது அந்த பார்சல் வெடித்ததில் பல்தேவ் மற்றும் அவரது சகோதரர் கிரிட் என்பவர் காயமடைந்தனர்.
மேலும் அவர்கள் வீடு சேதம் அடைந்தது. குண்டு வெடித்ததும் அங்கிருந்து தப்பிக்க முயன்ற கவுரவ் காதவியை பொதுமக்கள் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பார்சலை வழங்கிய கவுரவ் காதவியை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பல்தேவ் சுகாடியா குடும்பத்துடன் இருந்த முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்சலில் வைக்கப்பட்டிருந்த குண்டு தொலைவில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் இருந்து எலக்ட்ரானிக் சர்க்யூட்கள், பேட்டரிகள், பிளேடுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த குண்டு ஐஇடி வகை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அகமதாபாத், செக்டார்-1 கூடுதல் போலீஸ் கமிஷனர் நிரஜ்குமார் பட்குஜார் இதுபற்றி விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில்,’ குண்டு வெடித்ததில் பல்தேவ் மற்றும் கிரிட் இருவரும் லேசான காயம் அடைந்தனர். குறிப்பாக இதில் கிரீட் ஐஇடியில் அடைக்கப்பட்ட ரேஸர் பிளேடுகளால் காயமடைந்தார் . இந்த குண்டு தொலைதூரத்தில் இருந்து வெடிக்கச் செய்யப்பட்டிருக்கலாம். தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த குண்டு வெடிப்பு ெதாடர்பாக ரூபன் கிஷோர் பரோட் என்ற நபரை சந்தேகிப்பதாக பல்தேவ் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், கிஷோர் பரோட்டின் வீட்டில் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் மற்றும் மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் கிடைத்தன. அவரிடம் நடத்திய விசாரணையில் பரோட்டும் அவரது மனைவி ஹெட்டலும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதற்கு பல்தேவ் மீது குற்றம் சாட்டிய பரோட் தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக இந்த குண்டு வைத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக காதவி மற்றும் பரோட் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். குஜராத்தில் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வீட்டுக்கு வந்த பார்சலில் பயங்கரம் குஜராத்தில் குண்டு வெடித்து வீடு சேதம்;2 பேர் காயம்: ஒருவர் கைது appeared first on Dinakaran.