×
Saravana Stores

போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த விவகாரம் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடிக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த 4 சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அகற்றுமாறு கூறியபோது, சந்திரமோகனும் அவரது தோழி தனலட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து, ரோந்து பணியிலிருந்த போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் இருவரும் நடந்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்க போகிறீர்கள் என்று கேட்டார். இதை தொடர்ந்து இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

The post போலீசாரிடம் அநாகரீகமாக நடந்த விவகாரம் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடிக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bail ,Chandramohan ,Thanalakshmi ,Chennai ,Marina Loop Road ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் காவலர்களிடம் தகராறு; சிறையில் உள்ள ஜோடிக்கு ஜாமின்!