- அமைச்சர் மா. சூப்பர்மேன்
- சென்னை
- மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர்
- சுப்பிரமணியன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் எம். ஏ
- தின மலர்
சென்னை :நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்தப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “கிண்டி மருத்துவமனையில் இளைஞரின் தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். சாதாரண உணவுகளை எடுத்துக் கொள்ளும் அளவு காலையில் உடல் நலம் முன்னேற்றம் அடைந்தது; தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார்; இதய பாதிப்பு அவருக்கு உள்ளதால் இதயவியல் சிறப்பு மருத்துவக் குழுவும் சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவருக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடு குறித்து கேட்டறியப்பட்டது.
மதியத்திற்கு பிறகு மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ் மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. 36 மருத்துவகல்லூரி, 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படிப்படியாக டேக் அறிமுகம் செய்யப்படும். பொது மருத்துவப்பிரிவுக்கு வருவோருக்கு நீலநிற டேக் பொருத்தப்படும். சிவப்பு நிறம் தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு என் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசிடிவி செயல்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். மருத்துமனை ஒப்பந்த பணியாளர் வருகை பதிவேட்டை பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய அறிவுரை வழங்கியுள்ளோம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்த முடிவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!! appeared first on Dinakaran.